என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய தொழில் அதிபர்
நீங்கள் தேடியது "இந்திய தொழில் அதிபர்"
உலக கோடீஸ்வர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. #IshaAmbani #AnandPiramal #Wedding #MukeshAmbani
மும்பை:
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன.
இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஐஸ்வர்யாராய், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பிரபலங்களின் அணிவகுப்பால் மும்பையே பரபரப்பாக காணப்பட்டது.
முன்னதாக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடந்த திருமண சடங்குகளில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் திரண்டது குறிப்பிடத்தக்கது. #IshaAmbani #AnandPiramal #Wedding #MukeshAmbani

அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
நியூயார்க்:
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் சஞ்சய் திரிபாதி (வயது 48). இந்தியரான இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிர்வாகியாக இருந்து பின்னர் தொழில் அதிபர் ஆனவர் ஆவார்.
இவர் அங்கு இளம்பெண்களை நாடுகிற பெரியவர்களுக்கான ‘டேட்டிங்’ இணையதளம் மூலம் 38 வயதான ஒரு பெண்ணுடன் பழகினார். தன்னை பெரும்பணக்காரர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், குறித்த நாள் அன்று அந்தப் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்தார். ஓட்டலுக்கு வந்தால் நிச்சயம் பரிசு தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதன் பேரிலேயே அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தினர்.
அதன்பின்னர் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டனர். அப்போது அவர், அந்தப் பெண்ணுடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன், மிருகவெறியுடன் தாக்கியதாகவும், அதில் அந்தப் பெண் அடையாளம் காண முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சஞ்சய் திரிபாதி மீது மேன்ஹட்டன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து உருக்கமுடன் விவரித்தார்.
விசாரணை முடிவில், சஞ்சய் திரிபாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. #Tamilnews

×

X